அ.தி.மு.க. தலைமை அலுவலகம்
அ.தி.மு.க. தலைமை அலுவலகம்

செல்போன் ஒட்டுக்கேட்பு… அ.தி.மு.க. சார்பில் புகார்!

அ.தி.மு.க. தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக உளவுத்துறை ஐ.ஜி. செந்தில் வேலவன் மீது அ.தி.மு.க.வின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பத்துரை புகார் அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள், உதவியாளர்கள், ஓட்டுநர்களின் செல்போன் உளவுத்துறை மூலம் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும், இதற்காக இஸ்ரேலில் இருந்து ரூ.40 கோடிக்கு உளவு மென்பொருள் வாங்கப்பட்டுள்ளதாகவும் அ.தி.மு.க. குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

மேலும் தேர்தலுக்கான யூகங்களை தினமும் தமிழக முதலமைச்சருக்கு தெரியப்படுத்தும் விதமாக செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும், எனவே, உளவுத்துறை ஐ.ஜி. மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பத்துரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது மனைவி, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் செல்போன்களை தமிழக உளவுத்துறை ஒட்டுக்கேட்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், அ.தி.மு.க.வும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com