மத்திய நிதி: மக்களுக்கு அல்வா வழங்கிய தி.மு.க.வினர்!

மத்திய நிதி: மக்களுக்கு அல்வா வழங்கிய தி.மு.க.வினர்!

மத்திய அரசு அளிக்கும் நிதிப்பகிர்வை உணர்த்தும் வகையில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், நெல்லை வடக்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு அல்வா வழங்கினர்.

தமிழகத்தில் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்பு சேதங்களை சரிசெய்ய ரூ. 37,000 கோடி நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

மேலும், பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அனைத்து கட்சி எம்.பி.க்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து வலியுறுத்தினர். இருந்த போதும் மத்திய அரசு உரிய நிதி வழங்கவில்லையென தமிழக அரசு தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் விவாதத்துக்குள்ளானது.

இந்தநிலையில், மத்திய அரசின் நிதிப்பகிர்வை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தி.மு.க. சார்பாக அல்வா கொடுக்கும் நூதன போராட்டம் தொடங்கியுள்ளது. சென்னை, திருநெல்வேலி உட்பட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் அல்வா கொடுத்தனர்.

சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கும், ஓட்டுநர்கர்களுக்கும் தி.முக.வினர் அல்வா வழங்கினர். அல்வாவோடு இணைக்கப்பட்ட நோட்டீசில் ”ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்கிய நிதி ZERO” என அச்சடித்து அதில் ஒரு அல்வா துண்டை இணைந்து வழங்கி வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com