சத்ய பிரதா சாகு
சத்ய பிரதா சாகு

வாக்கு சதவீதம் என்ன? - தலைமைத் தேர்தல் அதிகாரியின் பேட்டி 3 முறை தள்ளிவைப்பு!

தமிழகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவு குறித்த முழுமையான தகவல்களை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப் பிரதா சாகு இன்று முற்பகல் 11 மணிக்கு வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. 

ஆனால், அப்படி நடைபெறவில்லை. ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் 12 மணிக்கு சாகு செய்தியாளர்களைச் சந்திப்பார் என்று கூறப்பட்டது. 

பின்னர் அதுவும் நடைபெறாமல் பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் எனக் கூறப்பட்டது. அப்படியும் ஊடகத்தினரை அவர் சந்திப்பது நிகழவில்லை. 

ஒரு மணி நேரம் கழிந்தநிலையில் மாலை 5 மணிவாக்கில் அவர் செய்தியாளர்களைச் சந்திப்பார் அல்லது செய்திக்குறிப்பை வெளியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. 

நேற்று இரவு வெளியிடப்பட்ட இரண்டு வாக்களிப்பு சதவீத அறிவிப்புகள் மாறுபாடாக இருந்ததால், அரசியல் கட்சியினர், ஆர்வலர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.  

இந்த நிலையில், மாநிலத்தின் வாக்களிப்பு நிலவரத்தைத் தெளிவுபடுத்துவது குறித்து சத்தியப் பிரதா சாகுவின் அறிக்கையோ விளக்கமோ வந்தால்தான் உறுதி என்கிற நிலையே நீடிக்கிறது.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com