தேர்தல் ஆணையமும் பிரச்சாரத்தில் இறங்கியது- ‘திறன்மிகு வாக்காளராக ஆகுங்கள்!’

வாக்காளர் கையேட்டை வெளியிட்ட தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு
வாக்காளர் கையேட்டை வெளியிட்ட தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு
Published on

மக்களவைத் தேர்தலுக்கான அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்க, தேர்தல் ஆணையமும் தன் பங்குக்கு பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. 

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியாக தேர்தல் ஆணையமானது நாடு முழுக்க பல்வேறு வகைகளில் பரப்புரையைச் செய்யத் தொடங்கியுள்ளது. 

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு இன்று, ’திறன்மிகு வாக்காளராகுங்கள்’ என்கிற பெயரில் வாக்காளர் கையேட்டை வெளியிட்டுள்ளார். 

வாக்காளருக்கான உறுதிமொழியாக ஒரு வாசகம் இடம்பெற்றுள்ளது. 

அதில், “மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com