அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புதிதாக உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நவம்பர் 19ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், இன்று 9 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இருந்தது, இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை ஒடிசா கடற்கரைக்கு நகரும்.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்திபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com