கோவை சிறுமி கொலை வழக்கு- 21 நாள்களில் குற்றப்பத்திரிகை!

கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
Published on

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட கோவை சிறுமியின் வழக்கில், குற்றப்பத்திரிக்கையை இன்று போலீசார் தாக்கல் செய்தனர்.

கடந்த மாதம் 21ஆம் தேதி, கோவை சூலூரில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக், தஞ்சாவூரைச் சேர்ந்த மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை முடிந்து போக்சோ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர்களை ஜுன் 12வரை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இன்று, காவல்துறையினர் 21 நாள் விசாரணையை நிறைவுசெய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com