மின்சார ரயில்
மின்சார ரயில்

சென்னை மின்சார ரயில் வண்டிகள் ஆங்காங்கே திடீர் நிறுத்தம்!

சென்னையில் பழைய கடற்கரை முதல் தாம்பரம்வரை அன்றாடம் இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மின்ரயில் வண்டிகளில் பயணம் செய்துவருகின்றனர். பாரி முனை, தலைமைச்செயலகம், அரசு மருத்துவமனை, உயர்நீதிமன்றம் எனப் பல முக்கிய இடங்களுக்குச் சென்றுவரும் மக்களுக்கு இந்த மின்ரயில் சேவை முக்கியமான போக்குவரத்தாக இருந்துவருகிறது. 

இந்த நிலையில் இன்று முற்பகல் 11.45 மணி வாக்கில் எழும்பூர்- கோட்டை ஆகிய தொடர்வண்டி நிலையங்களுக்கு இடையே சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் மின்சாரத் தொடர்வண்டிகள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டன. 

அரை மணி நேரத்துக்கும் மேல் மின்சார ரயில்வண்டிகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். 

பழுதை நீக்கும் பணியில் தொடர்வண்டித் துறையினர் மும்முரமாக ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்தில் நிலைமை சீராகிவிடும் என ரயில் போக்குவரத்துத் துறையினர் தெரிவித்தனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com