5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடை நீட்டிப்பு!

Chennai High Court
சென்னை உயர்நீதிமன்றம்
Published on

தேர்தல் வழக்கு உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

(முதலமைச்சர் விஜய் பதவிவிலகிய) திருச்சி கிழக்கு தொகுதி, எம்.ஆர்.விஜயபாஸ்கர்- கரூர், சி. விஜயபாஸ்கர்- விராலிமலை, ஜெயக்குமார் -பெருந்துறை, இசக்கி சுப்பையா- அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் அவர்களின் தேர்தல் வெற்றிக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், இந்த 5 தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.

இடைத்தேர்தல் அறிவிப்புக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது, தடையை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்கும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.   

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com