ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி!

Chennai High Court
சென்னை உயர்நீதிமன்றம்
Published on: 

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். மாநிலச் செயலர் ஜெகதீசன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவன நாளை முன்னிட்டு, வரும் அக்டோபர் 18, 25ஆம் தேதி அல்லது நவம்பர் 1ஆம் தேதியில் தமிழகம் முழுவதும் ஊர்வலம் நடத்த அனுமதிக்கோரி காவல்துறையிடம் விண்ணப்பித்ததாகவும், அதுதொடர்பாக எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், விஜயதசமிக்கு முந்தைய நாளான அக்டோபர் 25, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் 128 இடங்களில் பேரணிகள், பொதுக் கூட்டங்கள் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், பேரணிக்கு அனுமதி மறுக்க காவல்துறை எந்த புதிய காரணங்களையும் கூறவில்லை என்றும் ஏற்கனவே நீதிமன்றம் நிராகரித்த பழைய காரணங்களையே மீண்டும் மீண்டும் கூறிவருவதாகவும் தெரிவித்தனர்.

எனவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணிக்கான நேரம், வழித்தடங்கள், இடங்களை அக்டோபர் 19ஆம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com