நம்ம ஊரு திருவிழா எனும் முழக்கத்துடன் முதலமைச்சரால் நாளை தொடங்கிவைக்கப்படும் சென்னை சங்கமம் 20 இடங்களில் நடத்தப்படுகிறது.
வரும் 15ஆம்தேதி முதல் 18ஆம்தேதிவரை மாலை 6 மணி முதல் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இதில் நடத்தப்பெறும். அத்துடன், மாநிலத்தின் பல்வேறு ஊர்களின் சிறப்பு உணவுவகைகளும் இங்கு விற்பனைக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வு நடைபெறவுள்ள இடங்கள்:
1. இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், எழும்பூர், சென்னை
2. மாநகராட்சி விளையாட்டு மைதானம், கொளத்தூர்
3. செம்மொழி பூங்கா, அண்ணா மேம்பாலம் அருகில், சென்னை
4. ராபின்சன் விளையாட்டு மைதானம், இராயபுரம்
5. இசைக்கல்லூரி வளாகம், இராஜா அண்ணாமலைபுரம்
6. அருங்காட்சியகம், எழும்பூர்
7. வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம்
8. மெரினா கடற்கரை
9. மாநகராட்சி மைதானம், நடேசன் பூங்கா எதிரில், தியாகராய நகர்
10. எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர்
11. திருவான்மியூர் கடற்கரை
T 12. மாநகராட்சி விளையாட்டுத் திடல், ராகவன் கால்னி, ஜாபர்கான்பேட்டை
13. மாநகராட்சி விளையாட்டுத் திடல், அசோக்நகர்
14. லேமேக்ஸ் பள்ளி வளாகம், பழனியப்பா நகர், வளசரவாக்கம்
15. கோபுரப்பூங்கா, அண்ணா நகர்
16. ஜெய்நகர் பூங்கா, கோயம்பேடு
17. படைத்துறை உடைத் தொழிற்சாலை வளாகம், ஆவடி
18. கத்திபாரா சந்திப்பு, கிண்டி,
19. கண்டோன்மெண்ட் பூங்கா, பல்லாவரம்
20. வள்ளுவர் குருகுலம் பள்ளி, தாம்பரம்