வாபஸ் ஆனது கோழிக்கறிக் கடை மூடும் போராட்டம்!

chicken
கறிக்கோழி
Published on

கோழி வணிகர்கள் கூட்டமைப்பினர் அறிவித்திருந்த காலவரையற்ற கடையடைப்புப் போராட்டத்தை அவர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.

கோழி உற்பத்தியாளர்கள் சில நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாளை முதல் காலவரையற்ற கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கோழி வணிகர்கள் கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர்.

கோழிகளை விற்பனைக்குக் கொண்டுவருவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்னரே, தீவனங்களை நிறுத்த வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை நடத்தவிருந்தனர்.

கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழுவினர் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், காலவரையற்ற போராட்டத்தைக் கைவிடுவதாக கோழி வணிகர்கள் கூட்டமைப்பினர் இன்று அறிவித்துள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com