தென்காசி மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இதற்காக ஆய்க்குடியில் அரசு சார்பில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் அவர் தென்காசி மாவட்டத்திற்கு 10 புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.
1. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு ரூ.15 கோடி செலவில் 11 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.
2. சங்கரன்கோவில் மேலநீலிதநல்லூரில் 52 கோடி ரூபாயில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
3. மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை மையம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்
4. கடையம் ஊராட்சிக்கு 6 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.
5. சிவகிரி, கடையநல்லூர், சங்கரன் கோயில், திருவேங்கடம் வட்டங்களில் உள்ள கண்மாய்கள் ரூ. 12 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்.
6. கடனா நிதி அணை 4 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும்.
7. கடையநல்லூர் வட்டத்தில் உள்ள அணைக்கட்டுகள் 4 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
8. செங்கோட்டை வட்டம் அடவிநயினார் அணை, கால்வாய்கள் 5 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்.
9. வீரகேரளம்புதூர் வட்டத்தில் உள்ள கால்வாய் 2 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்
10. அரசு மகளிர் கல்லூரி 1 கோடி ரூபாய் செலவில் குடிநீர், பிற வசதிகள் செய்து தரப்படும்.