2030-க்குள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கிராமப்பகுதிகளில் 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என வாக்குறுதி அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 100 சதவீதம் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் அடுத்த 5 ஆண்டு வளர்ச்சிக்கான 14 அறிவிப்புகளை, Stalin Statement என்ற பெயரில் வெளியிட்டார்.
* 2030-க்குள் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கிராமப்பகுதிகளில் 5 லட்சம் வீடுகளும், நகர்ப்பகுதிகளில் 2 லட்சம் வீடுகளும் கட்டித்தரப்படும்.
* நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் ஆகியவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய சிறப்பு முகாம் நடத்தப்படும்
* ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும்
* மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் 1,000 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும்.
* அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 100 சதவீதம் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.
* ஒவ்வொரு பள்ளியிலும் விளையாட்டையும் உளவியல் பாதுகாப்பையும், வாழ்க்கை திறன் கல்வியையும் உறுதிப்படுத்துவோம்.
* உயர்கல்வியில் ஏ.ஐ. கல்வியும் ஏ.ஐ. ஆய்வகங்களும் நிறுவப்படும்
* சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படு. தேவைப்படும் இடங்களில் சமூக நீதி விடுதிகள் அமைக்கப்படும்
* சிறுபான்மையினர் கடன்பெறும் முறைகள் எளிமையாக்கப்படும்
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தம் இல்லா நிலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கிராமங்களின் வளர்ச்சிக்காக உத்தமர் காந்தி மாதிரி திட்டம் முதற்கட்டமாக 10 ஊராட்சிகளில் இன்றே தொடங்கப்படும்.
* மாவட்டந்தோறும் நவீன தொழிற்பூங்கா, சிறப்பு தொழிற்தொகுப்பு ஆகியவை அமைக்கப்படும்.
* சென்னை மற்றும் அனைத்து மாநகராட்சிகளிலும் நவீன கலாசார மையங்கள் அமைக்கப்படும்.