மு.க.ஸ்டாலினை சந்தித்து நிவாரண நிதி வழங்கிய குன்றக்குடி அடிகளார்
மு.க.ஸ்டாலினை சந்தித்து நிவாரண நிதி வழங்கிய குன்றக்குடி அடிகளார்

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் வழங்கிய குன்றக்குடி அடிகளார்!

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கும், பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும்,தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி, இயற்கை பேரிடரின்போது, அந்த சவால்களை எதிர்கொண்டு போர்க்கால அடிப்படையில் மக்களை காக்கும் பணியினை சிறப்புடன் ஆற்றியதற்காக தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பாராட்டு தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உடனிருந்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com