தமிழ் நாடு
முதலமைச்சரின் செயலாளர்கள் மாற்றம்!
முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக இருந்த என். முருகானந்தம் நேற்று தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டர்.
இந்த நிலையில், முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ். இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இரணாடவது தனிச் செயலாளராக சண்முகம் ஐ. ஏ.எஸ். மூன்றாவது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.