தலைமைச்செயலாளர் முருகானந்தம் அதிரடி மாற்றம்!

election comission of india
தேர்தல் ஆணையம்
Published on: 

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் முருகானந்தம் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. 

தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், ஏற்கெனவே பொறுப்பு டி.ஜி.பி.யாக இருந்த வெங்கட்ராமன் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, ஊழல் தடுப்பு காவல்துறையின் இயக்குநர் பதவியிலிருந்து டேவிட்சன் தேவாசீர்வாதமும் மாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான வழிகாட்டலை தலைமைச்செயலாளருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com