தேவாலய விவகாரம்: அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தேவாலய விவகாரம்: அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையின் மீது மூன்று சட்டப்பிரிவுகளின்படி தருமபுரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் அண்ணாமலையின் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற 'என் மண் என் மக்கள்' பயணத்தின்போது, பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள செயின்ட் லோர்டெஸ் தேவாலயத்தில் மாதா சிலைக்கு மாலை அணிவிக்க அவர் முயன்றார். அதற்கு கிறிஸ்தவ இளைஞர்கள் சிலர் எதிர்த்து தடுத்தனர். இதனால் அவர்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அவர்கள் மணிப்பூரில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அண்ணாமலைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. அதில், மணிப்பூர் பிரச்னை குறித்து அண்ணாமலை விவரிக்க முயல்வதும், 'உங்களுக்கு என்னைத் தடுக்க என்ன உரிமை உள்ளது? இப்போதே நான் 10,000 பேருடன் தர்ணாவில் ஈடுபட்டால் என்ன செய்வீர்கள்' என வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் இடம்பெற்றுள்ளது.

இந்த விவகாரத்தில், கார்த்திக் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணாமலை மீது 153 (A), 504, 505 (2) ஆகிய சட்டப்பிரிவுகளின்படி தருமபுரி, பொம்மிடி காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com