தென்கொரியத் தூதரகத்தில் மனு தரச் சென்றவர்கள் கைது!

சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன்
சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன்
Published on

சாம்சங் தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக தென்கொரியத் தூதரகத்தில் மனு கொடுப்பதற்காக, அ.சவுந்தரராசன் தலைமையில் தொழிற்சங்கத் தலைவர்கள் தென்கொரியத் தூதரகத்துக்குச் சென்றனர்.

சென்னையில் மயிலாப்பூரில் உள்ள தென்கொரியத் துணைத்தூதரக அலுவலகத்துக்கு இன்று காலையில் சாம்சங் தொழிற்சங்கத் தலைவர் முத்துக்குமார் முதலிய சங்க நிர்வாகிகள் உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அவர்களைக் காவல்துறையினர் தடுத்துநிறுத்தினர்.

அதையும் மீறி அவர்கள் செல்ல முற்பட்டதால் காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். அங்கு திரண்ட தொழிற்சங்கத்தினர் அனைவரும் காவல்துறையின் வேனில் ஏற்றப்பட்டனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com