தேர்வு எழுதும் மாணவர்கள்
தேர்வு எழுதும் மாணவர்கள்

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது!

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தோ்வு காலை 10 மணிக்குத் தொடங்கியது.

இந்தத் தேர்வை 3,302 மையங்களில் 7.94 லட்சம் போ் எழுதுகின்றனர். தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தோ்வு இன்று தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முதல் நாளில் தமிழ் உட்பட்ட மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தோ்வை 7,534 பள்ளிகளிலிருந்து 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 மாணவர்களும், 21,875 தனித்தோ்வா்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர், 125 சிறைக் கைதிகளும் எழுதுகின்றனர்.

மேலும், 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம்தாங்கிய காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com