பத்திரிகையாளரும் தொலைக்காட்சி செய்தி ஆசிரியருமான ப. திருமாவேலனின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா வரும் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நூல்களை வெளியிடுகிறார்.
தமிழின எழுச்சி, மீட்சியில் தி.மு.க. என்பதைப் பற்றிய ’தீரர்கள் கோட்டம் தி.மு.க.’, கோட்டையைக் கைப்பற்றிய கொள்கை என்பதை விளக்கும் ’திராவிட அரசியல் திராவிட அரசு இயல்’ ஆகிய இரு நூல்களை கருஞ்சட்டைப் பதிப்பகம் வெளியிடுகிறது.
முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர் எனும் நூலை கவிதா பப்ளிகேசன் வெளியிடுகிறது.
கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் இந்நிகழ்வில், தி.க. தலைவர் கி.வீரமணி, ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் நிறுவனரும் ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சருமான ஜெகத்ரட்சகன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோரும் நூல்களைப் பற்றிப் பேசுகிறார்கள்.