முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

கல்வித் துறையில் 4 கால் பாய்ச்சல்- மு.க. ஸ்டாலின் சுயபெருமிதம்!

Published on

தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின்னர் தமிழகம் கல்வித்துறையில் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் இன்றைய சமூக ஊடகப் பதிவு:

“ திராவிட மாடல் அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு, இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி!

20,332 அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி,

519.73 கோடி ரூபாயில் உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள்,

22,931 'Smart' வகுப்பறைகள்,

புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களினால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு;

நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம்தான் இது! பயணத்தைத் தொடர்வோம்! தமிழ்நாட்டை உயர்த்துவோம்!” என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com