தமிழ் நாடு
தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக ஊடகப் பக்கங்களில் புகழ் வணக்கச் செய்தி வெளியிட்டுள்ளார்.
அவரின் பதிவு:
”புரட்டுக் கதைகளுக்கும் - வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர்நடை போட வைத்த பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம்!
இன்று உலகம் முழுவதும் தமிழர் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம்!
ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அவரது அறிவுத்தீதான், நமது பாதைக்கான வெளிச்சம்! அந்த வெளிச்சத்தில் சமத்துவ உலகத்தை நிறுவுவதே நமது தலையாய பணி!” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.