பத்திரிகையாளர் குணசேகரனின் தந்தைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி
பத்திரிகையாளர் குணசேகரனின் தந்தைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி

பத்திரிகையாளர் குணசேகரனின் தந்தை மறைவு- முதலமைச்சர் நேரில் அஞ்சலி!

முதுநிலை பத்திரிகையாளரும் சன் நியூஸ் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியருமான மு.குணசேகரனின் தந்தை முனியா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 97.

சென்னை, அமைந்தகரையில் மகனின் குடும்பத்தாருடன் வசித்துவந்த அவருக்கு, இன்று காலையில் தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது. தகவல் அறிந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விரைந்துவந்து அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினார். குணசேகரனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பத்திரிகையாளர் குணசேகரனின் தந்தைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி
பத்திரிகையாளர் குணசேகரனின் தந்தைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி

காலை 9.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து மலரஞ்சலி செலுத்தி, குணசேகரனின் குடும்பத்தினருக்கு ஆறுதல்கூறினார்.

முன்னதாக, திட்டக்குழுத் துணைத்தலைவர் ஜெயரஞ்சன், எழுத்தாளர் வே.மதிமாறன், பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த செய்திப் பணியாளர்கள், திராவிடர் கழகத்தினர், திராவிடர் விடுதலைக் கழகத்தினர், பிற சமூகநீதி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அடக்கம்செய்வதற்காக அன்னாரின் உடல் அவரின் சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், பண்டஹள்ளிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com