உடலுறுப்பு தானம் மகத்தான மனிதநேயச் செயல் - விஜய் பாராட்டு

CM Vijay
முதலமைச்சர் விஜய்
Published on

தமிழ்நாடு உடலுறுப்பு தான நாளான இன்று உடலுறுப்புக் கொடையாளர்கள் அனைவரையும் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தி:

"உடலுறுப்பு தானம் குறித்த முக்கியத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், சிறுவன் ஹிதேந்திரனின் உடலுறுப்புகளை தானமாக வழங்கியதை நினைவுகூரும் வகையிலும் ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ஆம் நாள் தமிழ்நாடு உடலுறுப்பு தான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

உடலுறுப்பு தானம் என்பது, ஒருவர் மறைந்த பின்னரும் அவரது உறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு அளிக்கும் மகத்தான மனிதநேயச் செயலாகும்.

உறுப்பு மாற்று சிகிச்சைக்காகக் காத்திருக்கும் பலருக்குத் தானமாக வழங்கப்படும் ஒவ்வொரு உறுப்பும் புதிய நம்பிக்கையையும், புதிய வாழ்வையும் அளிக்கிறது.

மனிதநேயச் சுடரை ஏந்தி, உயிர்களின் மறுவாழ்வுக்கு வழிகாட்டும் உடலுறுப்புக் கொடையாளர்கள் அனைவரையும் இந்நாளில் பெருமையுடன் நினைவுகூர்வோம்!" என்று முதல்வர் விஜய் பதிவிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com