பாரா ஆசியா - வலுதூக்கும் வீராங்கனைக்கு ரூ.50 இலட்சம்!

Kasthuri rajamani
கஸ்தூரி ராஜாமணி
Published on: 

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனையை வாழ்த்தி, அவருக்கு ஊக்கத்தொகையும் அறிவித்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

ஜப்பானின் ஐச்சி-நாகோயா நகரில் நடைபெற்றுவரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா இதுவரை 12 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்களை வென்றுள்ளது.

இதில் பெண்களுக்கான வலுதூக்குதல் போட்டியில், 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார், கஸ்தூரி ராஜாமணி.

கஸ்தூரி ராஜாமணி
கஸ்தூரி ராஜாமணி

மேலும், அவரது சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com