எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா போல்... இந்த விஜய் மட்டும்தான்!

CM Vijay
முதலமைச்சர் விஜய்
Published on: 

தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் செய்தார்.

கோவை வரை விமானத்தில் சென்ற விஜய், பிரச்சார மேடை வரை சாலை வலம் மேற்கொண்டார்.

பிரச்சார அரங்கிற்குள் நுழைந்தவர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலைக்கு த.வெ.க.வின் துண்டை அணிவித்தார்.

முன்னதாக, த.வெ.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முதலமைச்சர் விஜய் பட்டியலிட்டார்.

பின்னர், பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

"மக்கள் ஓட்டுப்போட்டு த.வெ.க.வை ஜெயிக்க வைத்துவிட்டார்கள் என்பதை மறந்து, இன்னும் ஆட்சி செய்துகொண்டிருப்பதாகவும், அவர்களின் குடும்பத்திற்கு அடிமையாக இருப்பதாகவும் தி.மு.க. நினைத்துக் கொண்டிருக்கிறது.

முதலில், த.வெ.க.விற்கு இந்த மன்னராட்சி மனப்பான்மை கிடையாது.

இரண்டாவதாக, மக்களிடம் செல், மக்களுடன் வாழ் என்னும் அண்ணாவின் சொல்லைத் தான் த.வெ.க. பின்பற்றுகிறது. ஆனால், அண்ணாவின் சொற்களை மறந்துவிட்டு சிலர் பினாமியாக இருக்கிறார்கள்.

எம்மதமும் நம்மதம் என்பதால்தான் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்று நமது கூட்டணிக்கு பெயரிட்டுள்ளோம்.

தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணாவின் காலங்களில் சாதாரண மக்கள் தேர்தலில் நிற்பார்கள். அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் காலம் போலவேதான் த.வெ.க.வும் இப்பொழுது வெற்றி பெற்றுள்ளது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கொளத்தூர் மக்களிடம் இரு கரங்களை உயர்த்தி வணக்கம் தெரிவிப்பதை பார்க்கும்போது, அந்த குழந்தையே நீங்கதான் சார் என்று தோன்றுகிறது.

தி.மு.க. நம்மை தரம் தாழ்த்தி பேசப்பேச, மக்கள் த.வெ.க.வை மேலே கூட்டிப் போய் உட்கார வைப்பார்கள.

மக்கள் தீர்ப்பிற்கு தலை வணங்குகிறோம் என்று கூறும் தி.மு.க., மக்களின் தீர்ப்பை மதிக்கமாட்டார்கள்.

தி.மு.க. செய்யும் அதே செயல்களை அ.தி.மு.க. அப்படியே செய்கிறது.

தி.மு.க.வுடன், அ.தி.மு.க. கூட்டுச் சேர்வது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு ஏற்படுத்தும் அவமானம். அவர்களின் தொண்டர்களுக்கு வேதனையையும், மனவலியையும் உருவாக்குகிறது.

இதை தாங்கிக்கொள்ளமால் தான், சத்யபாமா முறையாக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, த.வெ.க.வில் இணைந்தார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைப் போல தி.மு.க.வை தில்லாக எதிர்ப்பது, இந்த விஜய் மட்டும்தான்."

இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com