
நேற்று காலமான த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் இறுதிச்சடங்கில் அவரது உடலை முதலமைச்சர் விஜய் சுமந்துசென்றார்.
கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி, மூச்சுத்திணறல் காரணமாக த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
தொடர்ந்து, அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. இன்று மாலை அவருடைய உடல் திரு.வி.க. நகரில் உள்ள மின்மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அவருடைய இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் விஜய், த.வெ.க. அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உட்பட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, வி.எஸ்.பாபுவின் உடலை அவருடைய உறவினர்களோடு சேர்ந்து முதலமைச்சர் விஜய்யும் தூக்கிச் சென்றார்.
பின்னர், மின்மயானம் வரையிலான இறுதி ஊர்வலத்தில், முதலமைச்சர் விஜய், த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு அவரின் உடல் எடுத்துச்செல்லப்பட்ட வண்டியுடன் சாலையில் நடந்துச் சென்றனர்.