
கரூரில் கடந்த ஆண்டு நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததைப் பற்றி முதலமைச்சர் விஜய் இன்று அங்கு பேசினார்.
அப்போது, ”பிரச்சாரக் கட்டத்தில் அரியலூரிலிருந்து பெரம்பலூருக்குப் போகத் தயாரானபோது, அங்கு மக்கள் கூட்டம் அதிகம் என போலீஸ் சொன்னது; நாங்கள் போகவில்லை; ஆனால், நாமக்கல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கரூருக்கு வரும்போது மட்டும் போலீஸ் அலர்ட் செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை? யார் சொல்லி இதைச் செய்தது? அப்படி நடந்தால் இப்படிச் செய்யலாம், இப்படி நடந்தால் அப்படிச் செய்யலாம் என அவர்களுக்கு யார் அழுத்தம் தந்தது?” என்று விஜய் கேள்வி எழுப்பினார்.
”போலீஸ் நினைத்திருந்தால் அந்தக் கூட்டத்தையே ரத்து செய்யலாம்; எங்களிடம் கேட்க வேண்டியதே இல்லை; அன்றைக்கு இருந்த கரூர் போலீசே நெடுஞ்சாலையிலிருந்து அந்த இடத்துக்கு கூட்டிக்கொண்டு வந்துவிட்டது நாடகம்... அதை முழுவதும் நம்பிவிட்டேன். எனக்கு இப்படியொரு நாடகம் நடக்குமென்று தெரியாது.” என்றும் விஜய் பேசினார்.