கடத்தலைத் தடுத்த காவலரை நேரில் அழைத்துப் பாராட்டிய முதல்வர் விஜய்!

CM Vijay congratulated the Police officer
காவலரை முதல்வர் விஜய் பாராட்டினார்
Published on: 

தன் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தலைத் தடுக்க உதவிய காவலரை முதல்வர் விஜய் பாராட்டினார்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள சோதனைச்சாவடியில், வழக்கமான வாகனச் சோதனையில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த வெள்ளை நிற கார் ஒன்றை காவலர்கள் நிறுத்த முயன்றபோது, கார் நிற்காமல் சென்றது.

இந்நிலையில், அங்கே மப்டியில் இருந்த தலைமைக் காவலர் வேல்முருகன், நிற்காமல் சென்ற காரின் மேற்கூரை மீது ஏறிப் படுத்தபடி, பல கிலோமீட்டர் தூரம் சென்று காரை மடக்கிப் பிடிக்க உதவினார்.

பின்னர், அந்த காரைச் சோதனையிட்டதில் ராஜாஸ்தானைச் சேர்ந்த கும்பல் ஒன்று 300 கிலோ குட்காவை கடத்தியது தெரியவந்தது. இதில் காரில் இருந்த இருவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய ஒருவரைத் தேடி வருகின்றனர்.

தன் உயிரை பணயம் வைத்து, குட்கா கடத்தலைத் தடுக்க உதவிய காவலர் வேல்முருனை, நேரில் அழைத்து முதலமைச்சர் விஜய் பாராட்டினார்.

மேலும், இந்தச் செயல் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளதாகவும், போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தமிழக அரசுக்கு ஊக்கமளிப்பதாகவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com