கரூர்... 31 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர் விஜய்!

CM Vijay
முதல்வர் விஜய்
Published on

தேர்தலுக்கு முன்னர் கரூரில் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பங்களைச் சார்ந்தவர்கள் 31 பேருக்கு அரசு வேலைக்கான ஆணையை முதல்வர் விஜய் இன்று வழங்கினார்.

நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், 32 பேருக்கு வேலை வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான நியமன ஆணையையும், ஒருவருக்கு கருணைத் தொகையையும் முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

நெரிசலில் இறந்துபோன ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி என்பவரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் கருணைத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை.

பள்ளிக்கல்வி, ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, வருவாய் துறை உட்பட்ட துறைகளில் கரூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த 31 பேரில், 18 பெண்கள்.

ஆனந்தஜோதி என்பவரின் மனைவி, இரண்டு குழந்தைகளும் பலியான நிலையில், அவருக்கு கல்வித் துறையில் இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆனந்தஜோதி, மா.நிவேதா, வை. சங்கவி, ச.திவ்யா, ந.கிருஷ்ணமூர்த்தி, க.சக்திவேல் ஆகியோருக்கு கரூர் மாவட்டத்தின் பள்ளிக்கல்வித் துறையில் இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சு. கலைச்செல்வி, செ.சதீஸ்குமார், வெ. விமல், ச.சுதன், அகிலா ஆகியோருக்கு அலுவலக உதவியாளர் பணியும்,

பெ.செல்வராணிக்கு நீதித்துறை துப்புரவுப் பணியும், ந.யோகேஷ்குமார், பா.ரகுநாதனுக்கும் இரவுக் காவலர் பணியும் மாவட்ட வருவாய்த் துறையில் வழங்கப்பட்டுள்ளது.

மோனிஷா, ப. சந்திரகலா, அஷ்வின்குமரன், ஜெயபிரகாஷ், நிவேதிதா, தீபலட்சுமி, மல்லிகா, பிரபாகரன், ம. பிரியதர்ஷினி ஆகியோருக்கு ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.

ச.மகாலட்சுமி, பா.தனலட்சுமி ஆகிய இருவருக்கும் காவல் துறையில் இளநிலை உதவியாளர் பணியும், சு. முருகனுக்கு அலுவலக உதவியாளர் பணியும் கரூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

செ. பிரபாகரன், மா. சர்மிளா ஆகியோருக்கு பதிவுத்துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.

குணசேகருக்கு பேரூராட்சித் துறையில் இளநிலை உதவியாளர் பணியும், ஜோதி என்பவருக்கு அடிமலைப்புதூர் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் இரவுக் காவலர் பணியும் வழங்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com