தகைசால் தமிழர், கல்பனா சாவ்லா, கலாம் விருதுகள்... யார் யாருக்கு?

MP Krishnasamy with award
தகைசால் விருது பெற்ற எம்.கிருஷ்ணசாமி
Published on: 

முதலமைச்சர் விஜய் புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் விருதுகளை வழங்கினார்.

தமிழகத்திற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய மூத்த தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எம். கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதுடன், ரூ.10 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

துணிவு, சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நெளஷீன் பானு சந்துக்கு வழங்கப்பட்டது. இவர் டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தான் போட்டியில் மூன்றுமுறை பங்கேற்றுள்ளார். இதை நிகழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த ஒரே பெண் இவர்தான்.

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதுக்கான தங்கப் பதக்கம், காசோலை, பாராட்டுச் சான்றிதழை சர்க்கரை நோயியல் துறையின் சிறப்பு நிபுணர் மருத்துவர் வி. மோகனுக்கு வழங்கப்பட்டது. அவரின் சார்பில் அவரின் மகள் பெற்றுக்கொண்டார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com