கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் விஜய்!

CM Vijay inaugurated Periyar arivulagam at Coimbatore
பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்
Published on: 

சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரிய நூலகம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகம் - நவீன அறிவியல் மையத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்துவைத்தார்.

சென்னையிலிருந்து விமானம் மூலமாக இன்று காலையில் கோவைக்குச் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய். விமான நிலையத்திலிருந்து அவர் சாலை வலம் மேற்கொண்டார்.

வழிநெடுகிலும் நின்றிருந்த இரசிகர்கள் அவரை வேடிக்கை பார்த்து ஆரவாரம் செய்தனர்.

ரூ.300 கோடி மதிப்பீட்டில், 7 தளங்களுடன் நவீன முறையில், பெரியாா் அறிவுலகம் - அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு, அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில்தான் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டன.

இந்த பெரியாா் அறிவுலகம் - அறிவியல் மையம், மொத்தம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 8 தளங்களைக் கொண்டு பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தின் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வளாகத்தில் கோளரங்கம், ஒரு லட்சம் புத்தகங்களைக் கொண்ட நூலகம், எண்ம நூலகம், ஆராய்ச்சி படிப்பகங்கள், குழந்தைகள் நூலகம், ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களுக்கான ‘இன்குபேஷன்’ மையம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

தொடர்ந்து, கோவையில் ரூ.32.32 கோடியிலான 114 திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்.

மேலும், ரூ. 34.72 கோடி மதிப்பில் 9,343 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அடையாளபூர்வமாக அவர் வழங்கினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com