சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு மாரத்தானை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் விஜய்.
இந்த விழிப்புணர்வு மாரத்தான் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்டது.
"ஸ்டார்ட் ரன்; ஸ்டாப் டிரக்ஸ்" என்ற வாசகத்துடன் இந்த மாரத்தான் தொடங்கியது.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே இந்த நிகழ்ச்சி தொடங்கியது.
முதலில் போதைப்பொருள் எதிர்ப்புக்கான உறுதிமொழியை பங்கேற்பாளர்கள் அனைவரும் முதல்வர் விஜய்யுடன் எடுத்துக்கொண்டனர்.
மாரத்தானை தொடங்கிவைத்த முதல்வர், பங்கேற்பாளர்களுடன் இணைந்து அவரும் மாரத்தானில் கலந்துக்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், மரிய வில்சன், அரசின் உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் உட்பட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, போதைப்பொருள் கண்காணிப்பில் சிறப்பாக பணிபுரிந்த 15 காவல் அதிகாரிகளுக்கு காவல் பதக்கத்தை முதல்வர் விஜய் அறிவித்தார்.
இந்தப் பதக்கங்கள் சுதந்திர தினமான ஆகஸ்ட் - 15 அன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.