பேப்பர் படிக்கிறது... பேரவையில் விஜய், உதயநிதி காரசாரம்!

உதயநிதி
உதயநிதி
Published on: 

சட்டப்பேரவையில் இன்று காவிரி விவகாரம் பற்றி கவன ஈர்ப்புத் தீர்மான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நான்கு அம்சங்களைக் குறிப்பிட்டார். 

அவருக்கு பதில் அளித்த முதலமைச்சர் விஜய், ”குறுவை சிறப்புத் தொகுப்பு ஏற்கெனவே கொடுக்கப்பட்டுவிட்டது. அரசியலே நாங்கள்தான் என்று சொல்கிறவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போய்விட்டதெனத் தெரியவில்லை. முன்னபின்ன பேப்பர் படிச்சிருந்தா நாட்டுல என்ன நடந்திருக்குன்னு தெரியும்.” என்றார். 

அதற்கு உடனடியாக பதிலடியாகப் பேசிய உதயநிதி, “ குறுவை சிறப்புத் தொகுப்பு ஒவ்வொரு அரசும் அறிவிப்பதுதான். விவசாயிகள் கேட்பது வறட்சி நிவாரணம். இரண்டுக்கும் வித்தியாசம் தெரிஞ்சிக்கணும். தினமும் பேப்பர் படிச்சா மட்டும் போதாது. விவசாயிகளைச் சந்திச்சுப் பேசினாலே தெரிஞ்சுக்கலாம்.” என்று கூறியதும், எதிர்க்கட்சி தரப்பில் ஆரவாரம் செய்தனர்.   

logo
Andhimazhai
www.andhimazhai.com