
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை முதலமைச்சர் விஜய் இன்று மாலையில் சந்தித்துப் பேசினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இச்சந்திப்பு நடைபெற்றது.
விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றபின்னர் மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்தார்.
பின்னர், குடியரசுத் துணைத்தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணனையும் விஜய் சந்தித்தார்.
மூன்று நாள்கள் பயணமாக புதுதில்லிக்குச் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், நிதி ஆயோக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
அரசுத் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பின்னர், காங்கிரஸ் தலைவர்களையும் விஜய் சந்தித்தார்.
கடந்த முறை அவர் தில்லிக்குச் சென்றபோதே இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் நேரம் ஒத்துவரவில்லை என்பதால் அச்சந்திப்பு இரத்தானது.
காங்கிரஸ் தலைவர் கார்கே, மூத்த தலைவர் சோனியா, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை விஜய் இன்று சந்தித்துப் பேசினார்.