முத்துராமலிங்கத் தேவரின் இலட்சியம்- முதல்வர் விஜய்

முத்துராமலிங்கத் தேவருக்கு முதல்வர் விஜய் மரியாதை
முத்துராமலிங்கத் தேவருக்கு முதல்வர் விஜய் மரியாதை
Published on: 

முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதலமைச்சர் விஜய் இன்று மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119ஆவது ஜெயந்தி, 64ஆம் ஆண்டு குருபூஜையையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து தனது சமூக ஊடகப்பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:

"தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள், குருபூஜை நாளில், அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்குகிறேன்.

வீரம் செறிந்த தனது பேச்சாற்றலால், நாட்டு மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பி, இந்திய தேசிய இராணுவத்திற்கு ஆதரவைத் திரட்டி, நாட்டின் விடுதலைக்காகப் போராடினார்.

சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்!" என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram