தமிழ் நாடு

சென்னையில் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்ட கொளத்தூர்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் உடல் பெரம்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
முன்னதாக, அவரது மரண அறிவிப்பை முன்னிட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, பாபு சிகிச்சைபெற்று வந்த மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது முதலமைச்சர் விஜய் அங்கு செல்வதாக கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.
ஆனால், பாபுவின் உடல் வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டதைத் தொடர்ந்து, விஜய் அவர் வீட்டுக்கே சென்று அஞ்சலி செலுத்தினார். பாபுவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.