அமைச்சர் சொன்ன வார்த்தை... ’சாரி’ கேட்ட முதல்வர் விஜய்!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்
Published on: 

சட்டப்பேரவையில் இன்று முதல் பாதி முழுவதும் காரசார விவாதமாக இருந்தது. எதிர்க்கட்சியினர் பேசுகையில் அமைச்சர்கள் பலரும் குறுக்கிட்டுப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் கூறியதற்கு எதிர்க்கட்சியினரும் பதில்கூற அவை நடவடிக்கைகள் கலகலப்பாகவும் அமைந்துபோனது. 

இதில், வனத் துறை அமைச்சர் ரஞ்சித்குமார் பேசும்போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை முதலில் பெயரை மட்டும் குறிப்பிட்டார். 

அதற்கு, தி.மு.க. தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். 

அந்த நேரம் பார்த்து அவைக்குள் வந்த முதலமைச்சர் விஜய், அனைவருக்கும் வணக்கம் செலுத்திவிட்டு இருக்கையில் அமர்ந்தார். 

பின்னர் எழுந்து, அமைச்சர் குறிப்பிட்டதற்காக, தான் ‘சாரி கேட்டுக்கொள்வதாக’க் குறிப்பிட்டார். 

அத்துடன், அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com