அடுத்து பெருந்துறை இடைத்தேர்தல்... ரூ.1,100 கோடி திட்ட உதவிகள் விழாவில் விஜய்!

CM Vijay tasted tea given by SHG
மகளிா் சுய உதவிக்குழுவினரின் அரங்கில் வைத்திருந்த தேநீரை முதல்வர் விஜய் சுவைத்தார்
Published on: 

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதலமைச்சர் விஜய் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சென்னையிலிருந்து விமானம் மூலமாக முதலமைச்சர் விஜய் கோவையைச் சென்றடைந்தார். பின்னர், அங்கிருந்து பெருந்துறையில் நிகழ்ச்சி நடைபெறும் இடம்வரை சாலைவலம் மேற்கொண்டார்.

சாலைவலம் மேற்கொள்ளும் முதலமைச்சரை பொதுமக்கள் பாதுகாப்பாகக் காண்பதற்காக வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் இரும்புத்தடுப்பு வைக்கப்பட்டிருந்தது.

பெருந்துறையில் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய், அந்த அரங்கில் மகளிா் சுய உதவிக்குழுவினர் காட்சிப்படுத்தியிருந்த விற்பனைப் பொருட்களைப் பார்வையிட்டார்.

அவர்கள் விற்பனை செய்த பொருட்கள் சிலவற்றை வாங்கிக்கொண்டார். மேலும், மகளிா் சுய உதவிக்குழுவினரின் அரங்கில் வைத்திருந்த தேநீரை முதல்வர் விஜய் சுவைத்தார்.

அதைத் தொடர்ந்து, 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில்முனைவோருக்கான ரூ.3,000 கோடி வங்கி நிதி இணைப்பை வழங்கினார். மகளிர் சுய உதவிக் குழுவினர் 5,000 பேருக்கு ரூ.1,100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் விஜய் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ், விஜய் பாலாஜி உட்பட்ட பலரும் கலந்துகொண்டனர்.

காலியாக உள்ள பெருந்துறை சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram