மோடி 76 : முதல்வர் விஜய் வாழ்த்து!

CM Vijay - PM Modi
முதல்வர் விஜய் - பிரதமர் மோடி
Published on

பிரதமர் மோடியின் 76ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் வாழ்த்து:

"வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்." என்று தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், பிரதமரின் தொகுதியான உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் இன்று அவருடைய பிறந்தநாள் விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

குஜராத்தில் உள்ள பிரதமரின் சொந்த ஊரான வத்நகாில், 1,000 இளைஞா்கள் பங்கேற்கும் மோட்டாா் சைக்கிள் பேரணி நடைபெறவுள்ளது.

இந்தப் பேரணி, 10 மாநிலங்களில் உள்ள 1,158 கிராமங்கள் வழியாக 40,000 கி.மீ. தூரம் செல்லவுள்ளது

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com