தமிழ் நாடு

முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் இன்று அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அதில், “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடலை தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்குமுன் கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும்.” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதன்மீது அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் பேசினர்.
இரண்டே வாக்கியங்களில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் செல்லசுவாமி, இதற்கான ஆணையையும் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பின்னர், ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.