மைய அமைச்சர் இராஜ்நாத்சிங்கிடம் தமிழக புயல் நிதிக்கான மனு அளித்த முதலமைச்சர் ஸ்டாலின்
மைய அமைச்சர் இராஜ்நாத்சிங்கிடம் தமிழக புயல் நிதிக்கான மனு அளித்த முதலமைச்சர் ஸ்டாலின்

புயல் நிவாரணத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ஒரு மாத ஊதியம் ; எம்.பி., எம்.எல்.ஏ.களுக்கும் வேண்டுகோள்!

மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும் அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து சற்றுமுன்னர் அவர் வெளியிட்ட அறிக்கை:

” மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 2 முதல் 4-ஆம் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழை என்பது, 47 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிலான பெருமழை. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பேரிடர் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமே ஏற்பட்டுள்ள பேரிடர்.

மழைநீர் வடிகால் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தி இருந்ததால்தான் பேரழிவு தவிர்க்கப்பட்டது. அதேபோல் அனைத்துத் துறைகளும் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்ததும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வைத்திருந்ததும் இணைந்து மக்களைக் காத்துள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்ற மீட்புப் பணிகளின் காரணமாக மூன்று நாட்களுக்குள் பெரும்பாலான இடங்கள் மீட்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மீட்புப் பணி நடந்து வருகிறது. இத்தகைய அசாதாரண நேரத்தில் அனைத்துத் தரப்பும் மக்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்கள் மீள்வதற்கு உதவியாக நல்லுள்ளங்கள் பலர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களுடைய பங்களிப்பை வழங்குகின்றனர். அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த இயற்கைப் பேரிடரிலிருந்து மீள்வதற்கான கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்ட வேண்டியது அவசியமாகிறது.

எனவே, அரசின்முனைப்பானமுயற்சிகளுக்குநமதுசமுதாயத்தின்ஒவ்வொருபிரிவினரும்தங்களால்இயன்றவகையில்உதவிசெய்யவேண்டியதுஅவசியம். இச்சூழலில்முதலமைச்சரின்பொதுநிவாரணநிதிக்குதாராளமாகநிதிவழங்கிடவேண்டுமென்றுஉங்கள்அனைவருக்கும்வேண்டுகோள்விடுக்கின்றேன். அதன்தொடக்கமாகஎன்னுடையஒருமாதகாலஊதியத்தைமுதலமைச்சர்பொதுநிவாரணநிதிக்குவழங்குகிறேன். தமிழ்நாட்டில்உள்ளஅனைத்துச்சட்டமன்றஉறுப்பினர்களும் - நாடாளுமன்றமக்களவைமற்றும்மாநிலங்களவைஉறுப்பினர்களும்தங்களுடையஒருமாதகாலஊதியத்தைமுதலமைச்சர்பொதுநிவாரணநிதிக்கு வழங்கிடக் கேட்டுகொள்கிறேன்.” என்று முதலமைச்சரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com