சிறுமிக்கு பாலின வன்கொடுமை - ஐ.ஜி. ரம்யாபாரதி தகவல்

சிறுமிக்கு பாலின வன்கொடுமை - ஐ.ஜி. ரம்யாபாரதி தகவல்
Published on

கோவையில் காணாமல்போய் கொல்லப்பட்ட சிறுமிக்கு பாலின வன்கொடுமை இழைக்கப்பட்டதாக காவல்துறை ஐ.ஜி. ரம்யாபாரதி தெரிவித்துள்ளார். 

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானதை அடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஐந்து தனிப்படைகள் அமைத்தும் 230+ கண்காணிப்பு கேமராக்களைப் பார்த்தும் குற்றவாளிகளான மோகன்ராஜ், கார்த்தி இருவரும் கைதுசெய்யப்பட்டனர். 

சிறுமியின் உடல் சடலக்கூராய்வுக்குப் பின்னர் முழுமையான தகவல்கள் தெரியவரும் என்றும் ஆனால் அவர் பாலின வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் முதல் கட்டமாகத் தெரிவித்துள்ளனர் என்றும் ரம்யா பாரதி கோவையில் இன்று செய்தியாளர்களிடம் கூறினார். 

இருபத்து நான்கு மணி நேரத்தில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டனர் என்றும் வழக்கில் உரிய தண்டனை பெற்றுத்தர விரைவுபடுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com