குருநாநக் கல்லூரி
குருநாநக் கல்லூரி

கல்லூரியில் வெடிகுண்டு வீச்சு: 10 மாணவர்கள் கைது!

வேளச்சேரி கல்லூரி மோதல் தொடர்பாக பத்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிண்டி - வேளச்சேரி சாலையில் உள்ளது குருநானக் கல்லூரி. இந்த கல்லூரியில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இருதரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நேற்று கல்லூரி வளாகத்திலேயே இருதரப்பு மாணவர்களும் மோதிக் கொண்டனர். அப்போது, 2 பட்டாசுகள் வீசப்பட்டதாகத் தெரிகிறது. இதில் ஒரு பட்டாசு பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், மற்றொரு பட்டாசு வெடிக்காமல் இருந்ததாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், வீசப்பட்ட பட்டாசுகள் நாட்டு பட்டாசு என்றும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, மோதலில் ஈடுபட்ட 18 மாணவர்கள் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டனர். மேலும் ஒரு மாணவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இருதரப்பு மோதல் தொடர்பாக இன்று 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்களில் இரண்டு பேர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com