நடிகர் விஜய் பிரச்சாரத்தின்போது குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி துன்புறுத்தியதாக கோவையில் வி.சி.க. பிரமுகர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
கோவை, கணபதி பகுதி வி.சி.க. தொண்டர் அணிச் செயலாளர் பாலகிருஷ்ணன் என்பவரே இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த 21ஆம் தேதி பிரச்சாரத்தின்போது குழந்தைகளிடம் அடம்பிடித்து வீட்டில் உள்ள பெரியவர்களிடம் த.வெ.க.வுக்கு வாக்களிக்க அடம்பிடிக்குமாறு கூறினார் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், விஜய்யின் அழுத்தம் காரணமாகத்தான் எத்தனையோ குழந்தைகளை வாக்குக் கருவிகளாக அவர் பயன்படுத்தியுள்ளார் என்றும் அவர் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார் என்றும் எத்தனையோ பெற்றோருக்கு இப்படியான பிரச்னைகள் வந்துள்ளன என்றும் கூறினார்.
தேர்தல் முடிவுகள் வந்தபின்னர் என்ன ஆகுமோ எனப் பதற்றமாக இருப்பதாகவும் விஜய் மீது இளஞ்சிறார் நீதிச் சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.