அப்பாவைக் காணோம்... நயினார் நாகேந்திரன் மீது புகார்

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்
Published on

பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய்யையும் அவரின் தாயாரையும் இழிவாகப் பேசிவிட்டதாக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் வர்த்தினி என்பவர், இந்தப் புகாரை இணையத்தின் மூலம் அனுப்பியுள்ளார்.

நயினார் விஜய், அவரின் தாயாரைப் பற்றி இழிவாகப் பேசியதை காணொலி ஒன்றில் தான் பார்த்தாகவும் இணையத்தில் அது பரவிவருகிறது என்றும் அதைக் கண்டு ஒரு பெண்ணாகவும் தாயாகவும் மிகுந்த மனவேதனை அடைவதாகவும் அவர் தன் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

நயினார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, ஒரே நாடு எனும் பா.ஜ.க. பத்திரிகை நிகழ்ச்சியில், அப்பா எங்கே என விஜய் கேட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய நயினார், வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால் சொல்லிவிடுவார் என்றும் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com