ஆம்னி பஸ் கொள்ளைக் கட்டணம்... மீண்டும் அட்டூழியம்!

Omni bus ticket rate increased
ஆம்னி பஸ் பேருந்து கட்டணம் உயர்வு
Published on: 

தனியார் ஆம்னி பேருந்துகள் இந்த வாரமும் தொடர் விடுமுறையையொட்டி பல மடங்கு கட்டணத்தை அதிகரித்துள்ளன. இது தொடர்பாக மாநிலம் முழுவதும் பயணிகள் சமூக ஊடகங்களில் ஆதங்கங்களைக் கொட்டிவருகின்றனர்.

தமிழகம் முழுவதும், ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு, அதிக அளவில் பொதுமக்கள் வெளியூர்களுக்குப் பயணம் செய்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை நிர்ணயித்துள்ளன.

இந்நிலையில், சென்னையிலிருந்து நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஈரோடு ஆகிய இடங்களுக்கு தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க பொதுவாக ரூ. 400 முதல் ரூ. 600 வரை வசூலிக்கப்படும் நிலையில், தற்போது தொர் விடுமுறைக்காகப் பயணிப்பவர்களுக்கு ரூ. 1,300 முதல் ரூ. 2,500 வரை கட்டணங்களை வசூலிக்கப்படுகிறது.

இதேபோல, சென்னையிலிருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கு வழக்கமான விமானக் கட்டணம் ரூ. 4,000 முதல் ரூ. 7,200வரை வசூலிக்கப்படும் நிலையில், ரூ. 12,000 முதல் ரூ. 23,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் உடனே புகார் அளிக்க வேண்டும் என்று அரசுப் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதிகப்படியான கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற புகார் எண்ணிலும், tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம் என்று அரசு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com