சத்திய மூர்த்தி பவன்
சத்திய மூர்த்தி பவன்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: காங்கிரஸ் பணிக் குழு நியமனம்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளுக்காக தமிழக காங்கிரஸ் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. 

மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ் குமார், எம்.பி.கள் விஷ்ணு பிரசாத், ஆர்.சுதா, கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை சந்திரசேகர், மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் டி.என். முருகானந்தம், முன்னாள் எம்.பி. ராணி, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத், விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ், விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாச குமார், மாநில துணைத் தலைவர்கள் முகமது குலாம் மொய்தீன், ரங்க பூபதி, வழக்கறிஞர் ஆர் ராஜமோகன் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை இன்று வெளியிட்ட அறிவிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com