ஜெயக்குமார்
ஜெயக்குமார்

காங். நிர்வாகி கொலை… கே.வி. தங்கபாலு உட்பட 30 பேருக்கு சம்மன்!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை தொடர்பான வழக்கில் கே. வி. தங்கபாலு உட்பட 30 பேருக்கு அம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், நேற்று முன் தினம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அவர் எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. தற்போது விசாரணை அதிகாரியாக காவல் துணை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்ட நபர்கள் மற்றும் சந்தேகத்துக்குரிய நபர்கள் என 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர்., ரூபி மனோகரன், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் இது தொடர்பாக முழு தகவல்களும் பெறப்பட்டு அறிக்கை தயாரிக்க இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com