அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர்கள் தொகுதி உடன்பாடு
அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர்கள் தொகுதி உடன்பாடு

காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9, புதுவை தொகுதிகள் ஒதுக்கீடு!

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. அணியில் காங்கிரஸ் தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கான ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை இருவரும் இன்று மாலையில் கையெழுத்திட்டனர். 

முன்னதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், கே.சி. வேணுகோபால், மேலிடப் பொறுப்பாளர் டாக்டர் அஜாய் குமார், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் மாநிலத் தலைவர்கள் தங்கபாலு, ஈ.வெ.கி.ச. இளங்கோவன், திருநாவுக்கரசர், மாநிலப் பொருளாளர் ரூபி மனோகரன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.  

அதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மேலிடத் தலைவர்களுடன் செல்வப்பெருந்தகை ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். 

அப்போது, உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com